2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ், அப்துல்லாஹ்)

மனித உரிமை டிப்ளோமா  பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  இன்று  புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது.

தேசிய  சமாதான பேரவையின் அனுசரணையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைக்கான கற்கை நிலையம்  புத்தளம் மாவட்டத்தில் நடாத்திய இக்கற்கை நெறியை  40 மாணவர்கள்  பூர்த்தி செய்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா ,  விசேட அதிதியாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம். தர்மசேன,  முன்னாள் வவுனியா மாவட்ட  செயலாளர் ஆர். எம். பி. சேனாநாயக்க உட்பட கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .