2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'வடமேல் மாகாணத்தில் அழகான நகராக புத்தளம் நகரை மாற்றியமைப்போம்'

Kogilavani   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

வடமேல் மாகாணத்தில் அழகான சிறந்த,  பயமற்ற நகரமாக புத்தளம் நகரை மாற்றியமைப்போம். புத்தளம் நகரில் அனைவரும் சமாதானமாக வாழுவோம். எம்மிடமிருந்து  உச்ச பயனைப்  பெற்றுக் கொள்ளுங்கள். அதே போன்று நீங்களும் எமக்கு ஒத்துழைப்புத் தாருங்கள். புத்தளம் நகரில் எந்த விடயத்திலும் அசாதாரணம்  நடைபெற விடமாட்டேன என்று புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

நேற்று மாலை புத்தளம் பெரிய பள்ளிவாயிலில்  பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் பெரிய பள்ளியின்  நிர்வாகக் குழுத்தலைவர் எஸ்.ஆர்.எம்.ஷ முஸம்மிலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன,  பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம். தர்மசேன, பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி கே.கே.கே. குணசேகர, புத்தளம்  பெரிய பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,  உலமாக்கள் உட்பட பலர் கலந்து கொணடனர்.

இதன்போதுஇ பொலிஸ் அதிகாரிகளின்  சேவையை  கௌரவித்து  பெரிய பள்ளியினால்   அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும்  வழங்ப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X