2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தென்னை மரத்தில் ஏறிய நபர் கால் வழுக்கி விழுந்து பலி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

பதநீர் எடுப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியபோது  கால் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த ஒருவர்  சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்ததாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளம சேருகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே  இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில் பதநீர் எடுப்பதற்காக  கடந்த சனிக்கிழமை மாலை பூரி வெட்டுவதற்காக மரத்தில் ஏறியபோது, சுமார் 40 அடி உயரத்திலிருந்து கால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில்,  படுகாயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டிருந்த இவர்  நேற்று  உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--