2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கற்பிட்டியில் ஆளுங்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: மூவர் படுகாயம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளரான எம்.ஏ.மின்னாத்தின் ஆதரவாளர்கள் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகியதுடன் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..:

கற்பிட்டி பிரதேசத்தில் நேற்றிரவு வேட்பாளர் மின்னாத்தின் ஆதரவாளர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளையில், அவ்விடத்துக்கு 3 வாகனங்களில் வந்த 15பேரைக் கொண்ட குழுவினர் - சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். எதிர்பார்க்காத இத்தாக்குதலால் நிலைகுலைந்த மின்னாத்தின் ஆதரவாளர்கள், தப்பியோட முயற்சித்தபோதும் - அகப்பட்டுக்கொண்ட 3பேர் தாக்குதல்காரர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் உடனடியாக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • muhusi Thursday, 17 February 2011 07:47 PM

    ஒருசில அரசியல்வாதிகள், அவர்களின் ஒரு சில வன்முறையாளர்கள் வன்முறைகளில் காட்டும் ஆர்வத்தை மக்களுக்கு சேவை புரிவதில் காட்டுவதில்லை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கவே செய்வர் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .