Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அதுல பண்டார)
சக பொலிஸ் உத்தியோகஸ்தர்களிடமிருந்து பணம், வங்கி ஏ.ரி.எம். அட்டை, செல்லிடத் தொலைபேசிகள் என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் அநுராதரபுரத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏ.ரி.ம் அட்டையையும் பணப்பையையும் பறிகொடுத்த மற்றொரு கான்ஸ்டபிள் செய்த முறைப்பாடு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போதே குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட ஏ.ரி.எம். அடட்டை மூலம் சந்தேக நபர் 5,000 ரூபா பணத்தை வங்கியிலிருந்து மீளப்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது போன்ற பல சம்பவங்களுக்கு தான் காரணமாக இருந்ததை சந்தேக நபர் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
கலென்பிந்துனுவேவ பிரதேசத்தின் மீகொடவௌ பகுதியைச் சேர்ந்த மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் இரு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்தார்.
இதேவேளை அநுராதரபும் பகுதியைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதியொருவர் சந்தேக நபருக்கு எதிரகா நடவடி;ககை மேற்கொள்ளப்படுவதை தடுக்க முயன்றதாகவும் அநுராதபுரம் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
1 hours ago