2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யானையை சுட்டுக்கொன்ற சிவில் பாதுகாப்பு படை வீரருக்கு விளக்க மறியல்

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

கடமைக்காக வழங்கப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கியினால் யானையொன்றுக்கு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை இம்மாதம் 22 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்தி கொல்லாவ நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய திலின கமகே உத்தரவிட்டார்.

துட்டுவௌ கப்புகொல்லாவ பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹொரவப்பொத்தானை உதவிப் பொலிஸ் அதிகாரி ஆனந்த சேரசிங்கவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .