Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து அநுராதபுரம் ஊடாகச் செல்லும் சகல பஸ் வண்டிகளும் இன்று தொடக்கம் புதிய வீதி வழிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு - யாழ்ப்பாணம், முல்லைத்தீவு – வவுனியா, மன்னார் வரையான பஸ் வண்டிகள் அநுராதபுரம் ஜயந்தி மாவத்தை சுற்று வட்டத்தின் ஊடாக பண்டாரநாயக்கா மாவத்தை வழியே பழைய பஸ் தரிப்பிடத்தின் ஊடாகச் செல்ல முடியும்.
அநுராதபுரம் நகரத்தில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பாலித்த நிஷ்ஷங்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .