Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
கஷ்டப் பிரதேசப் பகுதிகளிலுள்ள நோயாளர்களை துரிதகதியில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்காக விசேட அம்பியூலன்ஸ் வண்டி சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.
திம்புலாகல, பதவிய, மெதிரிகிரிய, தந்திரிமலை மற்றும் ஹொரவப்பொத்தானை ஆகிய கஷ்டப் பிரதேசங்களிலுள்ள மக்கள் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைகளைப் பெறுவதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இம்மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு விசேட அம்பியூலன்ஸ் வண்டி சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சேவையை பெற்றுக்கொள்வதற்காக அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விசேட அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக நோயாளியை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதோடு தேவையான வைத்திய வசதிகளும் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
38 minute ago
56 minute ago