2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வாகன விபத்தில் மாணவர்கள் படுகாயம்

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தழுவை எனுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை சமய வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கற்பிட்டி பிரதேசத்திலிருந்து வந்த லொறி ஒன்று இச்சிறுவர்களுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து லொறிச் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து, குறித்த லொறி அங்கிருந்த பொதுமக்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--