2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வாகன கொள்ளையில் ஈடுபட்ட போலி பொலிஸார் எழுவர் நாரம்மலயில் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 10 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பொலிஸ் அதிகாரிகள் வேடமிட்டு வாகனங்களை பரிசோதிக்கும் சாட்டில் பல வாகனங்களை கொள்ளையடித்த ஏழு சந்தேக நபர்களை குருணாகலை, நாரம்மல பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கண்டி, தன்ஓவிட்ட, கனேமுல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இச்சந்தேக நபர்கள் நாரம்மல, அவிச்சாவெல்ல ஆகிய பிரதேசங்களில் பெருமளவில் வாகனங்கள் கொள்ளையடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சந்தேக நபர்கள் கொள்ளையடித்த சில வாகனங்களையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். நாரம்மலை பொலிஸார் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .