2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கணித பாடத்துக்குரிய ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 15 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)


புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட எளுவன்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் கணிதப்பாடத்திற்குரிய ஆசிரியர் இன்மையால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பாடசாலையில் தரம் 1 முதல் 11 வரை 230 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

கடந்த காலங்களில் பயிற்றப்பட்ட மூன்று தொண்டர்  ஆசிரியர்கள் இப்பாடசாலையில் கணிதப்பாடங்களினை மாணவர்களுக்கு கற்பித்து வந்தபோதும், தற்போது ஒரு தொண்டர் ஆசிரியர் மட்டுமே கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால், இப்பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X