2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் நவீன பொழுதுபோக்கு திட்டம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர கடற்கரையோரப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளை நவீன முறையில் பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்ட தளமாக மாற்றியமைப்பதற்கு புத்தளம் நகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

புத்தளம் நரக மக்கள் மட்டுமன்றி புத்தளத்தை அண்டிய பிரதேசத்திலுள்ள மக்களும் இரவு மற்றும் விடுமுறை நாட்களிலும் தமது பொழுதுபோக்குகளை கழிப்பதற்கு உகந்த வகையில் புத்தளம் கடற்கரையோரப் பகுதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு போதிய வசதிகள் இல்லாமையினால் புத்தளம் நகருக்கு வரும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பாக புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் கவனத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து, உடனடியாக புத்தளம் மக்கள் தமது பொழுதுபோக்குகளை கழிப்பதற்கு உகந்த வகையில் புத்தளத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என புத்தளம் நகரசபைத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் எஸ்எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .