Menaka Mookandi / 2011 ஜூன் 23 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
வவுனியா – கொழும்பு பஸ்ஸில் பயணம் செய்த இராணுவ வீரர் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து தங்க நகையை திருடிய இருவரை கருவலகஸ்வெவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த பஸ்ஸில் பயணம் செய்த இராணுவ வீரர் ஒருவருக்கு கலாஓயாவில் வைத்து மயக்க மருந்தைக் கொடுத்த குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இராணுவ வீரரிடம் இருந்த தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச்செல்ல முற்பற்பட்ட போது பஸ்ஸில் பயணித்தவர்கள் அந்த இருவரையும் மடக்கிப்பிடித்து கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரும் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களினால் குறித்த சந்தேக நபர்கள் பிடிபட்டதும் இராணுவ வீரரிடம் திருடிய தங்கச் சங்கிலியை சந்தேக நபர்களில் ஒருவர் விழுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
55 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
55 minute ago
58 minute ago