2021 ஏப்ரல் 17, சனிக்கிழமை

புத்தளம் நகரில் கையெழுத்து சேகரிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 24 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)
போரம் ஏசியாவின் (Forum Asia) நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற நிர்வாக கிராம அலுவலரும், புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக உறுப்பினருமான பீ. ராசிக் கடத்தப்பட்டு நாளை சனிக்கிழமையுடன் 500வது நாள் நிறைவடைவதையிட்டு இக்கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யக் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமாவும் இணைந்து இவ் ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இக்கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர் இனங்காணப்பட்டு நீண்ட நாட்களாகின்ற போதும் இதுவரை அவரைக் கைது செய்யப்படாமையைக் கண்டிக்கின்றோம்.

கடந்த 500 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இக்கடத்தல் நாடகத்தை முடிவுக்கு கொண்டு வர புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா மற்றும் சமூக அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததும், சந்தேக நபர் கைது செய்யப்படாததும் இருப்பது உள்ளுர் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என  அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .