2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் மாவட்டத்தில் ஐந்து கலாசார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்ட இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி அநுராதபுரம் மாவட்டத்தில் ஐந்து கலாசார நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பலாகல, விலச்சிய, கல்நேவ, தமுத்தேகம, இப்பலோகம ஆகிய பகுதிகளிலேயே இக்கலாசார மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன.

இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் கிராமங்களில் மருவிப் போயுள்ள பல்வேறு கலாசார செயற்பாடுகளை மீண்டும் கட்டியெழுப்பி பல்வேறு கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரச் செய்யும் வகையிலுமே கலாசார மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X