2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

தெற்கிலுள்ள பௌத்த மத தலைவர்கள் புத்தளத்திற்கு விஜயம்

Super User   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

மதங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தெற்கிலுள்ள பௌத்த மத தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்று திங்கட்கிழமை புத்தளத்திற்கு விஜயம் செய்தனர்.

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில் புத்தளத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் இன்று இரவு மன்னாருக்கு செல்லவுள்ளனர்.

புத்தளத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் புத்தளம் மாவட்ட சர்வ மத பேரவையினர் வரவேற்றதுடன் புத்தளம் தில்லையடியிலுள்ள கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் விஷேட கூட்டமொன்றும் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பௌத்த, இந்து, கிரிஸ்தவ, முஸ்லிம் மத தலைவர்களும், புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் மற்றும் பொலிஸாரும் கலந்துகொண்டனர்.

இக்குழுவில் கொழும்பு, காலி, மாத்தறை, உள்ளிட்ட பல இடங்களை  சேர்ந்த பௌத்த மத தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X