2021 மே 06, வியாழக்கிழமை

புத்தளம் மாவட்டத்தில் வறட்சி: மாவட்ட செயலகத்தினால் குடி நீர் விநியோகம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக மக்கள் பகுடி நீர் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவுஸர் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வருவதாகவும் புத்தளம் மாவட்ட சமூக சேவைக்கான அதிகாரி இர்பான் தெரிவித்தார்.

குறிப்பாக, கருவெலகஸ்வௌ மற்றும் மஹாகும்புகடவெல பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரத்திற்கும் அதிகான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரம் திரட்டபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .