2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

சுற்றுலா விடுதியென்ற பெயரில் விபசார விடுதியொன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய தர்சிக்கா விமலசிரி உத்தரவிட்டார்.

விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட நான்கு சந்தேக நபர்களும் சுற்றுலா விடுதியென்ற பெயரில் விபசார விடுதியொன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டில் அநுராதபுரம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள்  நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அநுராதபுரம் புலங்குளம் திஸா மாவத்தையில் 'தலவெட்ட ரெஸ்ட்' என்ற பெயரில் குறித்த விபசார  விடுதி இயங்கி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0

  • sathya Thursday, 06 October 2011 05:09 PM

    இன்டர்சிட்டி பஸ்களில் நடக்கும் விபச்சார விடுதிகளை சுற்றி வளைக்கமாட்டார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--