2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

முந்தல் பிரதேசத்தில் இயங்கிய சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

முந்தல், கிரியங்கல்லிய பிரதேசத்தில் நீண்ட நாட்களாக சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையமொன்றை முற்றுகையிட்டுள்ள புத்தளம் பொலிஸ் பிரவின் குற்றத்தடுப்பு பிரிவினர், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் 5,000 லீற்றர் டீசலையும் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான பௌசர் ரக வாகனங்களின் சாரதிகளினால் சட்டவிரோதமான முறையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ள மேற்படி சந்தேக நபர், அவற்றை குறித்த பிரதேசத்தில் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது கண்டுபிடிக்கப்பட்ட டீசல், சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியானவை என்று தெரிவிக்கப்படுகின்றது. சும்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுர அபேவிக்கிரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--