2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் தில்லையடி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழம்பு – புத்தளம் பிரதான வீதியின் தில்லையடி பிரதேசத்திலுள்ள தேனீர் கடையொன்றில் வேலை செய்யும் 18 வயதான இல்யாஸ் முஹம்மது பௌசான் எனும் இளைஞனும் அவருடைய நண்பரும் குறித்த தேனீர் கடைக்கு அருகாமையில் கதைத்து கொண்டிருந்த சமயம் புத்தளத்திலிருந்த கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் வேக கட்டுப்hபட்டை மீறி விதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இருவர் மீதும் மோதியுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் சிறிது தூரம் வீசியெறியப்பட்ட இல்யாஸ் முஹம்மது பௌசானும், அவரது நண்பரான முஹம்மது தமீம் என்பவரும்  படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இல்யாஸ் முஹம்மது பௌசான் மரணமகியுள்ளார். இதேவேளை, காயமடைந்த முஹம்மது தமீம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி திவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இல்யாஸ் முஹம்மது பௌசானின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லையடி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செயய்யப்படவுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X