2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புத்தளம் நகரின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கூட்டம்

Super User   / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் நகரில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் புத்தளம் நகரின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று புதன்கிழமை மாலை  புத்தளம் இப்னு பதூதா மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் வர்த்தக சங்கம் மற்றும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றின்  ஏற்பாட்டில்  இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் புத்தளம் பொலிஸ் தொகுதிக்கான பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபேவிக்ரம, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ. பீ. டீ. சுகதபால, புத்தளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வீ. சிவலிங்கம், சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி  சுமித் ரோஹன  உள்ளிட்ட பலர் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--