Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
தாயொருவர் தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் கிணற்றில் குதித்த சம்பவமொன்று புத்தளத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்கினிமிட்டிய என்னும் பகுதியில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்ததாகவும் இதன்போது குழந்தை உடனேயே பலியானதாகவும் நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாயார் அயலவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில்; குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அனுஷா கல்கனி என்ற இரண்டு வயதுக் குழந்தையே இந்த சம்பவத்தில் பலியானார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தாயார் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரெனவும் விசாரணையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குழந்தையின் சடலம் நவகத்தேகம வைத்தியசாலையில் பிரே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
57 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
3 hours ago