2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசல்பாடு கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2011 நவம்பர் 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலத்தை முந்தல் பொலிஸார் இன்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.

ஐம்பது வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  குடும்ப பிரச்சினை இதற்கு காரணமாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .