Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 17 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகரசபை விளையாட்டு மைதானம் நவீன முறையில் புனரமைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும் புத்தளம் நகரசபைத் தலைவருமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் பிரசித்தி பெற்ற புத்தளம் நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லாமையால் விளையாட்டு வீரர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனாலேயே புத்தளம் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம், மேசைப்பந்தாட்டம், டெனிஸ் மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டு மைதானமாக புனரமைக்கப்படவுள்ளது.
இதேவேளை, புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட சாஹிரா ஆரம்பப் பாடசாலைக்கு நவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடம் அமைக்கப்படவுள்ளது. இப்பாடசாலைக்கு மலசலகூடம் அமைப்பதற்கென ஜனாதிபதியின் நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்.
44 minute ago
7 hours ago
19 Oct 2025
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
7 hours ago
19 Oct 2025
19 Oct 2025