2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பெண்ணிடமிருந்து கைத்தொலைபேசியை திருடிய இளைஞர் கைது

Super User   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

பெண்ணொருவரிடமிருந்த கைத்தொலைபேசியை திருடிய இளைஞரை புத்தளம் பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் புத்தளம் நகரில் வைத்து பெண்ணொருவரின் கைத்தொலைபேசியை  திருடிக்கொண்டு ஓட முயற்சித்த போது, புத்தளம் பஸ் நிலைய பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்து புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

புத்தளம், தில்லையடி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணையின் பின்னர்  நீதிமன்றில் ஆஜர்படுத்துவதவுள்ளதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .