2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி மாடுகளுடன் மூவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து லொறியொன்றில் ஏற்றி விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற மூன்று சந்தேகநபர்களை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மூன்று மாடுகளைக்கூட அடைக்க முடியாத மேற்படி லொறிக்கும் 11 மாடுகள் அமைக்கப்பட்டிருந்ததால், அவற்றில் ஒன்று மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 மாடுகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
திம்புலாகலை மற்றும் மின்னேரியா காட்டுப் பகுதிகளில் கட்டாக்காலியாகத் திரிந்த மாடுகளே இவ்வாறு பிடிக்கப்பட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவல பிரதேசத்துக்கு அவற்றைக் கொண்டு செல்லும் வழியிலேயே சந்தேகநபர்களைக் கைது செய்ததாக தெரிவித்த பொலிஸார், கைதான சந்தேகநபர்கள் ஜா – எல மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .