2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

அநுராதபுரத்தில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபுர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,677 குடும்பங்களைச் சேர்ந்த 12,532 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 41 குளங்கள் உடைப்பெடுத்தன. அத்துடன், உடைப்பெடுக்குமென இனங்காணப்பட்ட 70 குளங்களின் குளக்கட்டுக்கள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டன. மேலும் 50 குளங்களின் கட்டுக்களுக்கு மண்மூட்டைகள் இடப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் அநுராதபுரத்தில் 107 வீடுகள் முழுமையாகவும் 553 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன.  இதில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதமும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபா வீதமும் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கம் நிவாரணம் வழங்கும்போது அதிகாரிகள் தவறிழைத்தால், தராதரம் பாராது அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை  எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X