2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

தமுத்தேகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி மேற்படி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 35 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டதோடு இச்சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்களைக் கைது செய்திருந்தனர்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சியொன்றின் போது இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த் தகறாரே இக்கொலைக்குக் காரணமென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X