2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சேதமடைந்துள்ள பிரதேச செயலாளர் கட்டிடத்திற்கு பதிலாக மாற்று கட்டிடம் கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

சேதமடைந்துள்ள மஹவிலச்சிய பிரதேச செயலாளர் அலுவலக கட்டிடத்திற்குப் பதிலாக மாற்றுக் கட்டிடமொன்றை பெற்றுத் தருமாறு கோரி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலகக் கட்டிடம் 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டிருந்ததோடு 2 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதினிலும் கீழ் பகுதி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தின் சுவர்கள் வெடித்துள்ளதோடு கொங்கரீட் தட்டுகளும் சேதமடைந்துள்ளன.

இப்பிரதேச செயலகத்தில் சுமார் 130 பேர் கடமை புரிவதோடு 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளுக்காக வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--