2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பெண்ணை தாக்கிய வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் கைது

Super User   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

பெண் ஒருவரை  தாக்கினார் என்ற சந்தேகத்தில் பிரதேச சபை உறுப்பினரை நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிசார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வென்னப்புவ பிரதேச சபை உறுப்பிரே கைது செய்யப்பட்டுள்ளார்.  வென்னப்புவ, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்தே இவர் குறித்த பெண்ணை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் வென்னப்புவ, காலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப சந்தமாலி என்ற பெண் சிகிச்சைக்காக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் தாக்கியதாக பொலிஸாரிடம் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வென்னப்புவ பொலிஸார் சந்தேகநபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X