2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கருவலகஸ்வெவ  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலிகம பிரதேசத்திலேயே  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

பலிகம பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் பிரேமதிலக (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை  பலிகம பிரதேசத்தைச் சுமார் 100 பேர் அளவில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருவலகஸ்வெவ   பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த மக்கள், காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மின்வேலி அமைத்துத் தருமாறும் கோரினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .