2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

Kogilavani   / 2013 ஜூலை 23 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவரே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று திங்கட்கிழமை முதல் சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகரால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதை வஸ்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற காணரத்தினாலே இவர்கள் பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்றவேளை மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள பெண் பொலிஸ் சார்ஜன்ட் கடமைப் பொறுப்பில் இருந்துள்ளதுடன், மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் உப சேவை கடமையில் இருந்துள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்ற சந்தேக நபர் நேற்று நள்ளிரவில் மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடக்கு மஹகம எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X