2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு  நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

39 வயதான மீனவரொருவருக்கே விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் எவரும் இல்லாத வேளைகளில் இச்சந்தேக நபர் இச்சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இச்சிறுமி தனது தாய்க்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--