2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். 

வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர காட்டுப்புலியங்குளம் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியினைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--