2026 ஜனவரி 07, புதன்கிழமை

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட பலகைகள் மீட்பு

Kanagaraj   / 2013 ஜூலை 28 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட தேக்கு மற்றும் வேம்பு மர பலகைகளினை புத்தளம் பொலிசார் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன் பலகைகளினை கொண்டு செல்ல பயன்படுத்திய கெண்டர் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய புத்தளம், பொத்துவில்லு பிரதேசத்தில் குறித்த வாகனத்தினை வழிமறித்து பரிசோதனை செய்த போது குறித்த பலகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இவற்றின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .