2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

முன்னேஸ்வரம் பஸ் விபத்து; சாரதிக்கும் நடத்துனருக்கும் விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

நேற்று வியாழக்கிழமை சிலாபம் முன்னேஸ்வரம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழக்க காரணமாக இருந்த தனியார் பயணிகள் பஸ்ஸின் சாரதி மற்றும் அதன் நடத்துனர் ஆகிய இருவரையும் இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மாவட்ட மேலதிக நீதவான் திருமதி எல்.சி.லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்று காலை சிலாபம் குருணாகல் வீதியின் முன்னேஸ்வரம் பிரதேசத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றது. இதில் பெண் ஒருவர் குறித்த பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதுடன், மற்றைய பெண் பஸ்ஸிலிருந்து தவறி கீழே வீழ்ந்து அந்த பஸ்ஸில் சிக்கியே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தையடுத்து சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி மற்றும் அதன் நடத்துனர் ஆகியோர் இன்று சிலாபம் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போதே அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விபத்துடன் தொடர்புடைய வழக்கு முடிவடையும் வரை அந்த பஸ்ஸூக்கு வழங்கப்பட்டிருந்த பயணிகள் போக்குவரத்திற்கான அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி வைக்க வடமேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .