2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதி

Super User   / 2013 டிசெம்பர் 08 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் 2014ஆம் கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மத்ரசா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

க.பொ.த. சாதாரண தரஇ உயர் தர பாடங்களுடன் கிதாபு ஷரிஆ பிரிவுக்கு தோற்ற விருப்பமுள்ளவர்கள் 9ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தோராகவும் 15 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஹிப்ழு பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள்  2014ஆம் வருடம் பாடசாலை கல்வியில் 6ஆம் தரத்தில் கற்கக் கூடியோராக இருத்தல் வேண்டும்.

இவர்கள் பாடசாலை கல்வியை காலை வேளையில் புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் தொடர்வதோடு மாலை வேளையில் மத்ரசாவில் தங்கி இருந்து அல்குர்னை மனனம் செய்வார்கள். இந்த இரு பிரிவிக்கும் தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் அல்குர்ஆனை பார்த்து திருத்தமாக ஓதக்  கூடியோராகவும் உடல் ஆரோக்கியம் உள்ளவராகவும்  ஒழுக்கம் நன்நடத்தை உடையவராகவும் இருத்தல் வேண்டும்

கிதாபு ஷரீஆப் பிரிவு மாணவர்களுக்கு க.பொ.த சாதாரண தரப் பாடங்களும் உயர் தரப் பாடங்களும், அல்ஆலிம் பரீட்சை, அஹதிய்யா, தர்மசாரிய பரீட்சை, தொழில் கல்விப் பாடங்களும் மத்ரசாவில் நடாத்தப்படும். மேலதிக் விபரங்களுக்கு 0322265738 அல்லது 0774257372  இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என அதிபர், காசிமிய்யா அரபுக் கல்லுரி, புத்தளம் அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--