2021 மார்ச் 06, சனிக்கிழமை

கஞ்சாவுடன் பெண் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்தின் சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலிய மாதிரி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள  உணவகத்தினுள்  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவரை 295 கிராம் கஞ்சாவுடன் ஞாயிற்றுக்கிழமை (23) கைதுசெய்ததுடன், கஞ்சாவை கைப்பற்றியதாகவும்  சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

பயணிகள், பஸ் சாரதிகள் உட்பட சில வேளைகளில் பாடசாலை மாணவர்களுக்கும்  கஞ்சா விற்பனை செய்யப்பட்டிருக்கலாமென்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப்புறங்களில் அல்லது சரணாலயத்தினுள் இரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சாவை சில வியாபாரிகள் சாலியவௌ பிரதேசத்தின் தரகர்கள் மூலம் பெற்று இவ்விடத்திற்கு கொண்டு வந்திருக்கலாமெனச் சந்தேகிப்பதாகவும் கூறினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன்  சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .