2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பல கொள்ளைகளில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 26 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பல வீடுகளை உடைத்து  கொள்ளைகளில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் வென்னப்புவ, சிந்தாத்திரிய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான  இளைஞர் ஒருவரை  செவ்வாய்க்கிழமை (25)  கைதுசெய்ததாக  வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பல பிரதேசங்களிலும் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

தங்கநகைகள் மற்றும் மின் உபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை இவர் கொள்ளையிட்டதாகவும் இவற்றின் பெறுமதி சுமார் 15 இலட்சம் ரூபா இருக்குமெனவும்; பொலிஸார்  தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் அண்மையில் வென்னப்புவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்டமை  தொடர்பில் அவ்வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.  இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

இச்சந்தேக நபர் வென்னப்புவ, தங்கொட்டுவ மற்றும் கொச்சிக்கடை  பிரதேசங்களில் சுமார் 17  வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .