2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி முக்குத் தொடுவாய் கடலில் இன்று (02) காலை மிதந்துவந்த மோட்டார் குண்டை ஒத்த வகை குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அதனை வீட்டுக்கு கொண்டு வந்து சோதனை செய்ய முற்பட்ட வேளை வீட்டில் இருந்தவர்களினால் உடனடியாக பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று மாலை அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த குண்டைப் பாதுகாப்பாக மீட்டுள்ளதுடன்  அதனைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த குண்டு எந்த  வகையிலான குண்டு எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது போன்ற விடயங்கள் இதுவரை தெரியவில்லை எனவும் இக்குண்டு ஒரு கிலோ எடையும் 11/ 2அடி நீளமுமுடையது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .