2021 மார்ச் 03, புதன்கிழமை

ஹெரோயினுடன் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரையும் ஹெரோயின் பாவித்ததாகக் கூறப்படும் 03 பேரையும் கைதுசெய்ததாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து 3,500 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

மாதம்பை, ஊரலிய பிரதேசத்தில் சில காலமாக இரகசியமான முறையில்  இயங்கிவந்த  வீடொன்றின் சிறு குடிலொன்றை சனிக்கிழமை (05) இரவு திடீரெனச் சுற்றிவளைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் சந்தேக நபர்களை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  மாதம்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .