2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பாம்பாட்டிகளை பதம்பார்த்த பாம்புகள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாம்புகள் இரண்டு பாம்பாட்டிகள் இருவரை தீண்டியமையால் அவ்விருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

பாம்பாட்டிகள் இருவர் புத்தளம் பஸ் நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த போது, அவர்கள் வைத்திருந்த பெட்டிகளிலிருந்த பாம்புகள் இரண்டும் தப்பியோடியுள்ளன.

தப்பியோடிய பாம்புகள் இரண்டையும் பிடிப்பதற்கு முயற்சித்த போதே அவ்விரண்டுபாம்புகளும் பாம்பாட்டிகளை தீண்டியுள்ளதாகவும் அந்த இரண்டுபாம்புகளையும் பாம்பாட்டிகள் ஒருவாறு பிடித்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்களால் பிடிக்கப்பட்ட பாம்புகளை வன இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--