2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

திவிநெகும; அநுராதபுரத்தில் ஐந்தாவது வலயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய 04  மாவட்டங்களையும் உள்ளடக்கிய 05ஆவது வலயத்திற்கான பிரதான அலுவலகம்  அநுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (27)  திறந்து வைக்கப்படவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் இந்த அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். இதில் திவிநெகும திணைக்களத்தின் இந்த வலயத்திற்கான மேலதிக பணிப்பாளர் எஸ்.கே.லியனகே உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; எண்ணக்கருவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்  வழிகாட்டலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த திவிநெகும திணைக்களம் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் மேற்படி மட்டக்களப்பு,  திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய 04  மாவட்டங்களையும்  உள்ளடக்கிய 05ஆவது  வலயத்திற்கான பிரதான அலுவலகம் அநுராதபுரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--