2021 மே 18, செவ்வாய்க்கிழமை

புத்தளம் நகர சபை உறுப்பினராக சதுர்தீன் சத்தியப்பிரமாணம்

Princiya Dixci   / 2015 ஜனவரி 30 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர சபைக்கு, ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சி சார்பில் புதிய உறுப்பினராக தெரிவாகியுள்ள எம்.ஏ.சதுர்தீன், வியாழக்கிழமை (29) புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

புத்தளம் நகர சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராக செயற்பட்டு வந்த முன்னாள் நகர சபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து தனது நகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இவரின் பதவி வெற்றிடத்துக்கே புதிய உறுப்பினராக எம்.ஏ.சதுர்தீன் பதவியேற்றுக்கொண்டார்.

புத்தளம் தில்லையடி பிரதேசத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரான எம்.ஏ.சதுர்தீன் ஏற்கனவே புத்தளம் நகர சபையில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை நகர சபை உறுப்பினராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .