2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

சோற்றுப் பார்சலில் அரிசிப் புழு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஒருவர், புத்தளம் உணவு விடுதியொன்றில் இன்று புதன்கிழமை (12) வாங்கிய மதிய உணவில் புழுக்கள் இருந்ததாக புத்தளம் பொது சுகாதார  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த பணிப்பாளர், தான் வழமையாக வீட்டிலிருந்து உணவு கொண்டுவருவதாகவும் இன்றைய தினம் வைத்தியசாலை ஊழியர் ஒருவரிடம் பணம் கொடுத்து மதிய உணவு வாங்கி வரக் கூறியதாகவும் அந்நபர் உணவு விடுதியொன்றில் வாங்கி வந்த உணவிலேயே இவ்வாறு புழுக்கள் இருந்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.  

பொதியை விரித்துப் பார்க்கும் போது, குறித்த பொதியில், அசுத்தமான வாய்க்கால்களில் இருக்கும் புழுக்கள் அரிசி போன்று தென்பட்டதாக பணிப்பாளர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .