2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பெண்ணை ஏமாற்றியவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

பெண்ணொருவரை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு நாணய பரிமாற்று நிலையத்தின் உரிமையாளரான 52 வயதுடைய நபரை, செவ்வாய்க்கிழமை (18) இரவு கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 
  
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு தேவையான யூரோ பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் ஏழரை இலட்சம் ரூபாயை வென்னப்புவ நகரில் அமைந்துள்ள குறித்த வெளிநாட்டு நாணய பரிமாற்று நிலையத்தின் உரிமையாளருக்கு வழங்கியுள்ளார். 

எனினும், அந்த யூரோ பணத்துக்கு பெறுமதியான அரைவாசி ரூபாயையே அந்த பெண்ணுக்கு வழங்கியுள்ளதாக பெண், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .