Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 17 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
மாதம்பையிலுள்ள தனியார் உருக்குத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த உருக்குத் தொழிற்சாலையில் பணியாற்றும் மின்சாரம் தொடர்பான ஊழியர் (இலக்ட்ரீசியன்) ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பு தொடர்பாகப் பார்ப்பதற்காக இவர் மேல் மாடிக்குச் சென்ற நிலையில் அவர் கீழே விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக இவர் மாதம்பை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அதற்கு முன்னமே இவரின் உயிரிழ்ந்;திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கியதால் இவர் கீழே விழுந்து இறந்தாரா என்பது தொடர்பில் விசாரணை செய்து வருவதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
03 Jul 2025