2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கடலாமை இறைச்சி, 424 முட்டைகளுடன் இருவர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டியில், 11 கிலோகிராம் நிறைகொண்ட கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகள் 424 யை வைத்திருந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலாமையை கடலுக்குள் வைத்து கொன்று இறைச்சி மற்றும் முட்டைகளை கரைக்கு எடுத்துவந்தபோதே கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கொஸ்கொட கடற்கரையில் அரிய வகை கடலாமையொன்று இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த கடலாமை மூன்று மீற்றர் நீளமானது என்றும் மீன் வலையில் சிக்கிய போயே கடலாமை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--