2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய 6 பேர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

அநுராதபுரம் மாவட்டத்தின்  கெக்கிராவையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 6 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கெக்கிராவை கலாகரம்பவேவ பிரதேசத்திலுள்ள காணியொன்றில்  இவர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பிரதேசவாசிகளிடமிருந்து  கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து குறித்து இடத்திற்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

தொல்பொருளியல் ரீதியில் பெறுமதியான பல பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இக்குழுக்கள் ஈடுபட்டிருந்தாக சந்தேகிக்கப்படுகிறது.

மற்றொரு சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு கெக்கிராவை பொலிஸாரினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .