2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளிக்கும் ௯ட்டம்

ரஸீன் ரஸ்மின்   / 2017 மே 24 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் கிராம மட்டங்களில் கட்சியை பலப்படுத்தி புதிய அங்கத்தவர்களை கட்சிக்குள் உள்வாங்குவது தொடர்பில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கூட்டமொன்று, கற்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி, ஐ.தே.கவின் முக்கியஸ்தர்களான யூ.எம்.எம். அக்மல், ஏ.ஜே.எம்.தாரிக், முஹம்மது அலாவுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மியின் ஊடகச் செயலாளர் எஸ்.ஆர்.எம்.ஆஸாத் உட்பட பிரதேச அமைப்பாளர்கள், கட்சியின் ஆதராவாளர்கள் எனப் பலரும் பலரும் கலந்துகொண்டனர்.

கற்பிட்டி பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி பிரதான அமைப்பாளர் தலைமையில், ஒரே அணியாக செயற்படுவதென்று, ஆதரவாளர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அத்துடன், கற்பிட்டி பிரதேச மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில், இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள், இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல், மக்கள் மத்தியில் சுயதொழிலை ஊக்குவிப்பது உள்ளிட்ட விடயங்களை முறையாக தொகுத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .